உயர்நீதிமன்றத்தில் திரையிட்ட ‘துப்பாக்கி’ படம்

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி படம் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் திரையிடப்பட்டது.

இஸ்லாமிய மக்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் காட்சிகள் துப்பாக்கி திரையிப்படத்தில் உள்ளது என்றும், அதனால் அப்படத்திற்கு மத்திய தணிக்கை குழு வழங்கிய யு சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்றும், இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் ரஹீம் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்து மனு மீதான விசாரணையை மேற்மொண்ட நீதிபதிகள், சர்ச்சைக்குரிய காட்சிகள் துப்பாக்கி படத்தில் இடம்பெற்றுள்ளனவா என்பது பற்றி ஆராய்வதற்காக துப்பாக்கி படத்தை நீதிமன்றத்தில் திரையிட்டு காட்ட ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டார்.

அதன்படி அதன்படி, உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் துப்பாக்கி படம் திரையிடப்பட்டது. நீதிபதிகள் ஆர். பானுமதி, கே.கே. சசிதரன், மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் சங்கரசுப்பு, ஏ. ரமேஷ், திரைப்படத் தயாரிப்பாளர் தரப்பு வழக்கறிஞர் மகேஸ்வரி, அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஐ.எஸ். இன்பதுரை மற்றும் பத்திரிகையாளர்கள் உள்பட பலர் திரைப்படத்தைப் பார்த்தனர். சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து வழக்கறிஞர் சங்கரசுப்பு நீதிபதிகளிடம் தெரிவித்தார். ஏற்கெனவே நீக்கம் செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து தயாரிப்பாளர் தரப்பு வழக்கறிஞர் மகேஸ்வரி நீதிபதிகளிடம் விளக்கினார்.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு குறித்து விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Filed Under: சினி செய்திகள்விஜய்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English