சிறந்த வீடியோ பாடலுக்கான ‘எம்.டி.வி-வி.எம்.ஏ.ஐ’ விருது பெற்ற ‘தாண்டவம்’

 சிறந்த வீடியோ பாடலுக்கான 'எம்.டி.வி-வி.எம்.ஏ.ஐ' விருது பெற்ற 'தாண்டவம்'

விக்ரம் நடிப்பில், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான ‘தாண்டவம்’ படத்தில் இடம்பெறும் ‘உயிரின் உயிரே..’ பாடலுக்கு 2013ஆம் ஆண்டுக்கான சிறந்த வீடியோ பாடலுக்கான ‘எம்.டி.வி-வி.எம்.ஏ.ஐ’ விருது கிடைத்துள்ளது.

விக்ரம், அனுஷ்கா, எமி ஜாக்சன், சந்தானம், நாசர் ஆகியோர் நடித்திருக்கும் தாண்டவம் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையத்துள்ளார். ஏல்.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘உயிரின் உயிரே…’ பாடல் எம்.டிவி யின் சிறந்த வீடியோ பாடலுக்கான விருதை பெற்றுள்ளது. 1984ஆம் ஆண்டு அமெரிக்காவில் அறிமுகமான எம்.டிவி, பல இளைஞர்களின் நாடி துடிப்பாக உள்ளது. இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு நாட்டில் சிறந்த வீடியோ பாடல் ஒன்றை தேர்வு செய்து அதற்கு விருது வழங்கி வருகிறது.

அந்த வகையில் 2013ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த வீடியோ பாடலாக தாண்டவம் படத்தின் பாடல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவ்விருது வழங்கும் விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் தாண்டவம் படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் கலந்துகொண்டு விருதை பெற்றுக்கொண்டார். (

Filed Under: சினி செய்திகள்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English