வத்திக்குச்சி

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், தனது தம்பி தீலீபனை ஹீரோவாக அறிமுகப்படுத்தியிருக்கும் படம் தான் ‘வத்திக்குச்சி.’

சென்னையை அடுத்துள்ள புறநகர் பகுதி சமத்துவபுரத்தில் வசிக்கும் ஷேர் ஆட்டோ ஓட்நரான திலீபன், பிறருக்கு உதவி செய்வதினால் உபத்தரத்தை தேடிக்கொள்கிறார். இதானால் பணத்திற்காக கொலை செய்யும் கூலி படைத்தலைவன் சம்பத், நகைக்கடை முதலாளி ஜெயப்பிரகாஷ் மற்றும் அவரது மகன் ஆகியோர் திலீபனை கொலை செய்ய நினைக்க, திலீப்பனின் எதிர் வீட்டில் வசிக்கும் ஜெகனும் அவரது நண்பர்களும் திலீபனை கொலை செய்ய துப்பாக்கியுடன் அலைந்துக்கொண்டிருக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் அறியாத திலீபன், தனது சமத்துவபுரத்தில் வசிக்கும் அஞ்சலி பின்னால் காதலுக்காக அலைந்துக்கொண்டிருக்கிறார்.

திலீபனை கொலை செய்ய துடிக்கும் இவர்களுக்கும் திலீப்பனுக்கும் என்ன சம்மந்தம்? இவர்கள் ஏன் திலீபனை கொலை செய்ய நினைக்கிறார்கள். இவர்களின் கொலை முயற்சியில் இருந்து தீலீபன் தப்பித்தாரா அல்லது பலியானாரா என்பதை பல திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையின் மூலம் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் கிங்ஸ்லின்.

கிங்ஸ்லி, முருகதாஸின் உதவியாளர் என்பதை படத்தின் ஆரம்பமே சொல்லிவிடுகிறது. படத்தின் தொடக்கத்திலேயே ரசிகர்களை கதையுடன் ஒன்றிப்போகச் செய்யும் இயக்குநர் அடுத்தடுத்து வரும் காட்சிகளின் மூலம் படத்தை விறுவிறுப்பாக நகர்த்திச் செல்கிறார்.

அறிமுக நாயகன் தீலீபன், நடிப்பதை காட்டிலும் சண்டை நன்றாகவே போடுகிறார். ஆறடி உயரம், அதற்கேற்ப உடல் வாகு, சண்டை போடும் விதம் என ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்கான அனைத்து தகுதிகளும் திலீபனிடம் உள்ளது. இனி அவர் அடுத்தடுத்து நடிக்கும் படங்களில் நடிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தினால் நல்லது.

அஞ்சலி, இப்படத்தின் விசிட்டிங் கார்டாக இருந்தாலும், ஏதோ முருகதாஸுக்கு செய்யும் நன்றி கடன் போல ஏனோ தானோ என்று நடித்திருக்கிறார்.

ஹீரோவின் அம்மாவாக நடித்திருக்கும் சரண்யா பொன்வண்ணன், அப்பாவாக நடித்திருக்கும் பட்டிமன்ற ராஜா, வில்லன்கள் சம்பத், ஜெயப்பிரகாஷ், ஜெகன் உள்ளிட்ட அனைவரும் தங்களுடைய வேலையை குறை இல்லாமல் செய்திருக்கிறார்கள்.

ஜிப்ரானின் இசை மற்றும் குருதேவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

முதல் பாதியில் விறுவிறுப்பாக பயணிக்கும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் பம்புகிறது. அதுவும் தீலீபன் வில்லன்களிடம் இருந்து தப்பித்து பிறகு வில்லன்களை எதிர்கொள்வதும், தன்னுடைய கையாள் ஒருவனை சாதரணமாக கொலை செய்யும் சம்பத், தீலீபனை கொலை செய்யும் விஷயத்தில் மட்டும் மெத்தனம் காட்டுவது உள்ளிட்ட சில லாஜிக் மீறல்கள் விஷயத்தில் இயக்குநர் தடுமாறியிருந்தாலும், சாதாரண ஆக்ஷன் கதைக்கு திரைக்கதை வமைத்த விதத்திற்காக பாராட்டுப் பெறுகிறார்.

சம்பத்துடன் திலீபன் மோதும் காட்சி, தூத்துக்குடி ரவுடிகள் தண்ணீர் கேனில் சரக்கை ஊற்றி வைத்து குடிப்பது

போன்ற சிறு சிறு காட்சிகள் படத்தில் சுவாரஸ்யத்தை கூட்டியிருக்கிறது.

படத்தின் முதல் பாதியில் இருக்கும் நேர்த்தி, சஸ்பென்ஸ் இரண்டாம் பாதியிலும் தொடர்ந்திருந்தால், வத்திக்குச்சி பத்திக்குச்சி என்று சொல்லியிருக்கலாம். ஆனால், தற்போது சில இடங்களில் உள்ள குறைபாடால் இந்த வத்திக்குச்சி நமுத்துப்போச்சி என்று தான் சொல்ல வேண்டும்.

ஜெ.சுகுமார்

Filed Under: சினி விமர்சனம்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply
If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English