இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஷாம்

 இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஷாம்

தெலுங்கில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சுரேந்தர் ரெட்டியுடன் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறார் ஷாம். சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் ஷாம் முதன் முறையாக நடித்த படம் ‘கிக்’ (Kick). தெலுங்குத் திரையுலகில் இந்தப் படம் வெளிவந்து 30 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. ரவிதேஜாவிற்கு நீண்ட நாட்கள் கழித்து ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. ஒரு இடைவேளைக்குப் பின் கிடைத்த அந்த வெற்றி தெலுங்குத் திரையுலகிற்கே ஒரு புத்துணர்ச்சி கொடுத்தது என்றே சொல்லலாம். பிறகு கிக் படத்தை தமிழில் கில்லாடி என்ற தலைப்பில் ரீமேக் செய்தார்கள்.

அதன் பிறகு சுரேந்தர் ரெட்டியின் இயக்கத்தில் ஒசரவள்ளி என்கிற வெற்றிப் படத்தைக் கொடுத்த ஷாம் மூன்றாவது முறையாக அவரது இயக்கத்தில் ரேஸ்குர்ரம் (Racegurram) என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

ஷாம் குறித்து இயக்குநர் சுரேந்தர் ரெட்டி கூறும்போது, “என்னைப் பொருத்தவரையில் ஷாம் ஒரு லக்கி சார்ம் நானும் அவரும் இணைந்து பணியாற்றும் படங்கள் அத்துனையும் வெற்றிப்படங்களே! இந்தப் படத்தில் ஒரு ஃபன் லவிங் பாயாக (Fun Loving Boy)  நடிக்கவிருக்கிறார். தொடர்ந்து அவருடன் பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் இருக்கிறது.” என்றார்.

ஷாமின் இரண்டாவது மகிழ்ச்சி, இயக்குநர் வி.இசட். துறை இயக்கத்தில் வித்தியாசமான கெட் அப்புகளில் ஷாம் நடித்திருக்கும் ’6′ படத்தின் விநியோக உரிமையை ஸ்டுடியோ 9 மற்றும் அபி & அபி, வி ஹவுஸ் ப்ரொடக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் வாங்கியுள்ளன. ஸ்டுடியோ 9 மற்றும் அபி & அபி மற்றும் வி ஹவுஸ் ப்ரொடக்சன்ஸ் இணைந்து வெளியிட உள்ளது ஸ்ரீகாந்த் தேவாவின் அதிரடி இசையில் உருவான 6 படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பினைப் பெற்றிருக்கும் நிலையில் 6 படமும் விரைவில் வெளியாகவுள்ளது.

Filed Under: சினி செய்திகள்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English