ஹீரோவாக கொலவெறி புகழ் அனிருத்

கொலவெறி புகழ் அனிருத் ஹீரோவாக நடிக்கப்போகிற சமாச்சாரத்தை அவரே ஒரு மேடையில் தெரிவித்தார். ஆனால் என்ன படம், படத்தை யார் இயக்குகிறார்கள் என்பது போன்ற தகவல்களை சொல்லாமல் மென்னு விழுங்கி விட்டார். இதனால் அந்த படமாக இருக்குமா? இந்த படமாக இருக்குமா? என்று எழுந்த கணிப்புகளால் அவர் இசையமைக்கும் படங்களில்கூட அவர் நடிப்பது போன்று செய்திகள் வெளியாகின. இருப்பினும் அழுத்தக்காரரான அனிருத் அப்போதும் அந்த தகவலை வெளியிடவில்லை.

ஆனால், இப்போது நானும் ரவுடிதான்டா என்றொரு படத்தில் அனிருத் நாயகனாக நடிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. சிம்பு நடித்த போடா போடி படத்தை இயக்கிய விக்னேஷ்சிவா என்பவர்தான் அப்படத்தை இயக்குகிறாராம். படத்தின் தலைப்பு பயங்கரமாக இருந்தாலும், பக்கா காமெடி கதையாம். ஆனால் க்ளைமாக்ஸில் சீரியசாகி விடும் அனிருத், நானும் ரவுடிதான்டா என்று சொல்லிக்கொண்டு வில்லன்களை துரத்தி துரத்தி அடிப்பாராம். டைட்டீலுக்கு அப்போதுதான் உயிர் கொடுக்கிறார்களாம்.

Filed Under: சினி செய்திகள்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English