விமலின் கைவசம் 13 படங்கள்

மேல்தட்டு ஹீரோக்களெல்லாம் ஒரு படத்தை முடித்து விட்டுதான் அடுத்த படத்தில் இறங்குகிறார்கள். ஆனால், களவாணி விமலோ, தற்போது கைவசம் 13 படங்களை வைத்திருக்கிறார். எந்த படத்துக்கும் மொத்த கால்சீட்டாக கொடுப்பதில்லை. நான்கு நாள், ஐந்து நாள்கள் என்று பிரித்து பிரித்து கொடுத்திருக்கிறார். பெரும்பாலும் அவர் நடிப்பது பட்ஜெட் படங்களே என்பதால், சிலர் அவர் சொல்லும் நாளில் படப்பிடிப்பை மாற்றி வைத்துக்கொள்ளவும் தயாராக இருக்கிறார்களாம். அதனால்தான் பல படங்களில் ஒரே நேரத்தில் என்னால் நடிக்க முடிகிறது என்கிறார் விமல்.

இந்த சூழ்நிலையில், மேலும் சில கம்பெனிகள் விமலிடம் கால்சீட் கேட்டு துரத்தி வருகின்றன. ஆனால், அவர்களிடம் நடிப்பதில் எந்த தயக்கமும் இல்லை. ஆனால், அடுத்த ஆண்டு முழுக்க நான் கால்சீட் கொடுத்து வைத்திருக்கிறேன். அதற்கடுத்த ஆண்டுதான் உங்களுக்கு கால்சீட் தர முடியும். உங்களுக்கு ஓகேன்னா நானும் ரெடி என்கிறாராம்.

ஆனால், இப்போதே அவரை புக் பண்ணி வைத்து, ஒருவேளை அதற்குள் விமலின் மார்க்கெட் படுத்து விட்டால் என்ன செய்வது என்று தடுமாறும் படாதிபதிகள், அடுத்த ஆண்டு கடைசியில் மீண்டும் சந்திப்போம் என்று சொல்லிவிட்டு பின்வாங்கிக்கொண்டிருக்கின்றனர்.

Filed Under: சினி செய்திகள்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English