விஜய் படத்திற்கு இசையமைக்கப் போகும் அனிருத்

 விஜய் படத்திற்கு இசையமைக்கப் போகும் அனிருத்

இளம் இசையமைப்பாளர் அனிருத், தான் தற்போது கோலிவுட் இயக்குநர்களின் ஃபேவரைட் இசையமைப்பாளர். இவர் இசையமைப்பில் வெளியான இரண்டுப் படங்களின் பாடல்களும் மிகப் பெரிய அளவில் ஹிட் ஆனதால், தற்போது அனிருத்தின் அலுவலகத்தில் இயக்குநர்களில் வருகை அதிகரித்துள்ளது.

லாரன்ஸ் இயக்கும் முனி 3 படத்திற்கு ஒப்பந்தமாகியுள்ள அனிருத், கெளதம் மேனன் தயாரிக்கும் ஒரு படத்திற்கும் இசையமைக்கிறார். பிறகு தனுஷ் தயாரிக்கும் ஒரு படம் என்று பிஸியான இவருக்கு, தற்போது ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆம், முருகதாஸ் – விஜய் கூட்டணியின் உருவாகும் படத்திற்கு அனிருத் தான் இசையமைப்பாளர்.

தற்போது இந்தியில் பிஸ்தல் என்ற படத்தை இயக்கிக்கொண்டிருக்கும் முருகதாஸ், அப்படம் முடிந்தப் பிறகு விஜயை வைத்து ஒரு படம் இயக்குகிறார். இந்த படத்திற்கு அனிருத்தை இசையமைப்பாளராக்க அவர் விருப்பம் தெரிவித்துள்ளாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்குகிறது.

Filed Under: சினி செய்திகள்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English