ஷாங்காய் திரைப்பட விழாவில் திரையிடப்படம் கனேடிய தமிழர்களின் படம்

 ஷாங்காய் திரைப்பட விழாவில் திரையிடப்படம் கனேடிய தமிழர்களின் படம்

கனேடிய தமிழர்களின் படைப்பான ‘ஏ கன் அண்ட் ஏ ரிங்’ ( A GUN & A RING) என்ற திரைப்படம் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது.

சீனா நட்டின், ஷாங்காய் மாநிலத்தில் நடைபெறும் ஷாங்காய் சர்வதேச திரைப்ப்ட விழா உலக அளவில் பிரசித்திப் பெற்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் ஒன்றாகும். வருக் ஜூன் மாதம் 16வது ஷாங்காய் சர்வதேச திரைப்படம் நடைபெறுகிறது. உலக அளவில் பல்வேறு திரைப்படங்கள் கலந்துகொள்ளும் இத்திரைபப்ட விழாவில் கனடாவில் வாழும் தமிழரான லெனின் எம்.சிவத்தின் இயக்கத்தில், கனேடிய தமிழ் கலைஞர்கள் நடித்துள்ள, ‘ஏ கன் அண்ட் ஏ ரிங்’ ( A GUN & A RING) என்ற திரைப்படம், ஷாங்காய் திரைப்பட விழாவின் ‘தங்கக் குவளை’ (Golden Goblet) விருதுக்குப் போட்டியிடுவதற்காக தேர்வாகியுள்ளது.

112 நாடுகளில் இருந்து போட்டிப் பிரிவில் கலந்துகொண்ட 1655 திரைபப்டங்கலிருந்து 12 படங்கள் மட்டுமே இந்த விருதுக்க்கான போட்டிக்கு தேர்வாகியுள்ளது என்பதும், ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவுக்குத் தேர்வான முதலாவது தமிழ்த் திரைப்படம் ஏ கன் அண்ட் ஏ ரிங் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Filed Under: சினி செய்திகள்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English