“நடிக்கிறேன்னு சொல்லி, கிடைச்சத விட்றாதே” – அனிருத்துக்கு ரஜினி அட்வைஸ்

இளம் வயதில் இமாலய வெற்றிகளை குவித்து வரும் இசையமைப்பாளர் அனிருத், முன்னணி இயக்குநர்களுடன் கைகோர்க்க ஆரம்பித்துவிட்டார். அதே சமயத்தில் அவருக்கு ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசையும் வந்துவிட்டது. இதற்காக தனக்கு ஏற்ற கதையையும் தேட ஆரம்பித்த அனிருத்துக்கு, முருகதாஸ் படத்தில் இசையமைக்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.

இதற்காக அவரை அழைத்து ரஜினிகாந்த் சமீபத்தில் பாராட்டினாராம். அப்படியே கூடவே கொஞ்சம் அட்வைஸும் செய்திருக்கிறார்.

“உன் வளர்ச்சிக்கு என்னோட ஆசிர்வாதங்கள்” என்றவர், அதற்கப்புறம் “இப்படியே இசையிலே கவனம் செலுத்தி இன்னும் இன்னும்னு பெரிய படங்கள் செய்யணும். அவ்வளவு ஏன்? நீ என் படத்திற்கு இசையமைக்கிற நேரமும் வந்து கொண்டேயிருக்கு. இந்த நேரத்தில் ஹீரோவா நடிக்கிறேன்னு இறங்கி வாழ்க்கைய ஸ்பாயில் பண்ணிக்காதே. இறைவன் காட்ற பாதையில் சந்தோஷமா போகணும். நீயே இன்னொரு பாதையை முடிவு பண்ணி, கிடைச்சிருக்கிறதையும் விட்ற கூடாது. யோசி” என்று கூறினாராம்.

ரஜினிகாந்தின் அட்வைஸ் என்ன அனிருத்துக்கு கசக்கவா போகிறது! யோசித்தவர் தற்போது நடிக்கும் முடிவை கைவிட்டுவிட்டு, இசைத் துறையில் இன்னும் மும்முரம் காட்ட ஆரம்பித்துவிட்டாராம்.

Filed Under: சினி செய்திகள்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English