Connect with us

மறைந்த நடிகர் மனைவிக்கு 6 மாத சிறைத்தண்டனை..! காரணம் என்ன.?

Home 35 1

Trending News

மறைந்த நடிகர் மனைவிக்கு 6 மாத சிறைத்தண்டனை..! காரணம் என்ன.?

மறைந்த நடிகர் J.K.ரித்தீஷ்

தமிழில் கானல் நீர், நாயகன், பெண் சிங்கம், எல்.கே.ஜி போன்ற திரைப்படங்களில் நடித்தவர் ஜே.கே.ரித்தீஷ். அந்த வகையில் திமுக சார்பில் போட்டியிட்டு ராமநாதபுரம் எம்.பி-யாக பதவி வகித்தார். அதன்பின்னர் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

jk rithesh family photos 23 1

கடந்த 2019-ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு திடீரென மரணம் அடைந்தார். 46 வயதில் ஜே.கே. ரித்தீஷ் மரணமடைந்தது திரையுலகினர் மத்தியிலும், அரசியல் வட்டாரத்திலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

IMG 20230512 172129 k8b93

மனைவிக்கு 6 மாத சிறைத்தண்டனை

நடிகர் ஜே.கே.ரித்தீஷுக்கு ஜோதீஸ்வரி என்கிற மனைவி உள்ளார். அவருக்கு தற்போது சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 41 வயதாகும் ஜோதீஸ்வரி, காரைக்குடியில் நகைத் தொழில் செய்துவரும் திருச்செல்வம் என்பவரிடம் இருந்து ரூ.60 லட்சம் மதிப்பிலான தங்க, வைர நகைகளையும் வெள்ளி பொருட்களையும் வாங்கி இருக்கிறார். இதற்கான பணத்தை தராமல் ரூ.20 லட்சத்துக்கான 3 காசோலையை வழங்கி இருக்கிறார்.

kamadenu 2023 05 6605f41b fd4c 446d 9ef0 ce64ed957d62 JK Rithesh Family Photos 20 1

இந்த காசோலையை திருச்செல்வம் வங்கியில் செலுத்தியபோது தான் அதில் பணம் இல்லாதது தெரியவந்துள்ளது. எனவே, இது தொடர்பாக காரைக்குடி விரைவு நீதிமன்றத்தில் திருச்செல்வம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஜெயப்பிரதா, ஜோதீஸ்வரிக்கு 60 லட்சம் அபராதம் மற்றும் 6 மாத சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். இது காரைக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Trending News

To Top