Connect with us

ரசிகரின் வீட்டிற்கு திடீரென ஆட்டோவில் சென்ற நடிகர் சூரி.! காரணம் இதுதான்.. நெகிழ்ச்சி வீடியோ உள்ளே..!

Soori Visit His Fan House

Trending News

ரசிகரின் வீட்டிற்கு திடீரென ஆட்டோவில் சென்ற நடிகர் சூரி.! காரணம் இதுதான்.. நெகிழ்ச்சி வீடியோ உள்ளே..!

நடிகர் சூரி

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் இயக்குனர் “வெற்றிமாறன்” இயக்கத்தில் வெளியான “விடுதலை” எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். இதனை அடுத்து தற்போது  இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் “கொட்டுக்காளி” திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகை “அன்னா பென்” முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்தத் திரைப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1890516 19

1890517 21

ரசிகரின் வீட்டிற்கு திடீரென ஆட்டோவில் சென்ற நடிகர் சூரி

நடிகர் சூரி சமீபத்தில் மதுரை வந்தபோது அவரது ரசிகர்களில் ஒருவர் அம்மா உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வந்தது குறித்து தகவல் கேட்டார். இதையடுத்து அவரை நேரில் சந்திக்க ஆட்டோவில் அவரது வீட்டிற்கு சென்றார். பின்னர் அந்த பெண்மணியிடம் பேசிய சூரி என் அன்பு தம்பிகள் என்னை அவர்களுக்கு ரொம்ப பிடிக்கும் என் பெயரை சொல்லி பல உதவிகள் செய்கிறார்கள்.

240822727 406671694149251 3192240370458371838 n

“என்னுடைய ரசிகரின் அம்மா என்னோட அம்மா மாதிரி” என்று கூறியதோடு தனது ரசிகரின் உறவினர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதனையடுத்து அவர் மீண்டும் ஆட்டோவில் அந்த இடத்தில் இருந்து கிளம்பினார். நடிகர் சூரி தனது அம்மாவின் உடல் நிலையை விசாரிக்க நேரில் வந்ததை எடுத்து அந்த ரசிகர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Trending News

To Top