Connect with us

சென்னையில் பிரபல தியேட்டரை விலைக்கு வாங்கிய நடிகை நயன்தாரா..! சினிமாவை தாண்டி பிசினஸில் புரளும் கோடிகள்..!

568bab734b47a841e59396a100133181 1

Trending News

சென்னையில் பிரபல தியேட்டரை விலைக்கு வாங்கிய நடிகை நயன்தாரா..! சினிமாவை தாண்டி பிசினஸில் புரளும் கோடிகள்..!

நடிகை நயன்தாரா

தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. ஒரு நடிகையாக இப்படி இருப்பது இது சாதாரண விஷயம் கிடையாது. தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான். இவர் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் ஜோடி போட்டு நடித்துள்ளார்.  தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகனார் அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார்.

nayantharah 277489690 538741904319481 7039703898952219825 n

இவர் தற்போது ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இவர் கடந்த வருடம் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்தனர்.இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் பல கட்ட விசாரணைகளுக்குப் பிறகு இந்த பிரச்சனை முடிவுக்கு வந்த நிலையில் தற்போது தங்கள் குழந்தைகளுக்கு  உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் என பெயர் வைத்துள்ளனர்.

தியேட்டரை விலைக்கு வாங்கிய நடிகை நயன்தாரா

தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நயன்தாரா தற்போது ஒரு படத்திற்கு சுமார் 5 முதல் 10 கோடி ரூபாய் வரைக்கும் சம்பளம் பெறுகிறார். தனக்கென தனி ஜெட் விமானம் ஒன்றை வைத்திருக்கிறார். அதில் கணவருடன் அவ்வப்போது கொச்சி, ஹைதராபாத், மும்பை என ட்ரிப் அடிப்பார்.

2aa52a6ff8acc4aefb0982c0453b437d

தற்போது சென்னையில் பிரபல தியேட்டரில் ஒன்றாக இருந்து மூடப்பட்ட அகஸ்தியா திரையரங்கை சொந்தமாக விலைக்கு வங்கியிருக்கிறாராம். விரைவில் அந்த திரையரங்கு வளாகத்தில் மேலும் புதிதாக இரண்டு தியேட்டர்களை கட்டவும் முடிவெடுத்திருக்கிறாராம். அடுத்த ஆண்டு இந்த தியேட்டர் திறக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

1 Comment

1 Comment

  1. Pingback: நயன்தாரா ஜெயம் ரவி நடிக்கும் இறைவன் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Trending News

To Top