Connect with us

சென்னையில் சுந்தர் பிச்சை வாழ்ந்த பூர்வீக வீட்டை வாங்கிய பிரபல தமிழ் நடிகர்..! யார் தெரியுமா..?

சென்னையில் சுந்தர் பிச்சை வாழ்ந்த பூர்வீக வீட்டை வாங்கிய பிரபல தமிழ் நடிகர்

Trending News

சென்னையில் சுந்தர் பிச்சை வாழ்ந்த பூர்வீக வீட்டை வாங்கிய பிரபல தமிழ் நடிகர்..! யார் தெரியுமா..?

சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சையை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். Google நிறுவன தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை இருக்கிறார். இவர் சென்னையை சேர்ந்தவர். இவருக்கு அசோக் பகுதியில் சொந்தமாக பூர்வீக வீடும் இருக்கிறது. சுந்தர் பிச்சை பிறந்து வளர்ந்தது படித்து முடித்தது எல்லாமே இங்கு தான்.

Sundar Pichai

Sundar Pichai

இவர் கரக்பூர் ஐஐடி மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் தன்னுடைய மேற்படிப்பை முடித்திருக்கிறார். பிறகு 2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் இணைந்து சுந்தர் பிச்சை பணியாற்றினார். தற்போது இவர் கூகுள் நிறுவன சிஇஓவாக பதவி வகித்து வருகிறார். அந்த அளவிற்கு பிரபலமான நபராக திகழ்ந்து கொண்டிருக்கின்றார்.

வீட்டை வாங்கிய நடிகர்

உலகிலேயே அதிக சம்பளம் வாங்குபவர்களில் ஒருவரான சுந்தர் பிச்சை, கலிபோர்னியாவில் பிரம்மாண்ட ஆடம்பர பங்களாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சுந்தர் பிச்சையின் தந்தை ரெகுநாத பிச்சை முதன்முதலில் வாங்கிய சென்னை அசோக் நகரில் உள்ள வீட்டை விற்று விடலாம் என்று முடிவு செய்துள்ளார்.

Sundar Pichai House

Sundar Pichai House

இதை நடிகரும் தயாரிப்பாளருமான “சி மணிகண்டன்” வாங்கி இருக்கிறார். மேலும் இது குறித்து மணிகண்டன் கூறியிருப்பது “சுந்தர் பிச்சை வாழ்ந்த வீடு என்று தெரிந்ததுமே” அதை வாங்க முடிவு செய்தேன். சுந்தர் பிச்சையின் தந்தை “ரெகுநாத பிச்சை” வாங்கிய முதல் சொத்து இதுதான். அவர் பெயரில் தான் வீடு இருக்கிறது. அவர் அமெரிக்காவில் இருந்ததால் இந்த வீட்டை வாங்குவதற்கான பணிகளை முடிக்க நான்கு மாதங்கள் ஆனது என்று அவர் கூறியிருந்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Trending News

To Top