Connect with us

மாரடைப்பால் திடீரென உயிரிழந்த பிரபல வில்லன்..! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்.!

Home 42 1

Trending News

மாரடைப்பால் திடீரென உயிரிழந்த பிரபல வில்லன்..! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்.!

நடிகர் கசான் கான்

கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான ‘செந்தமிழ் பாட்டு’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் மலையாள நடிகர் கசான் கான். இதைத்தொடர்ந்து, கலைஞன், வேடன், சேதுபதி ஐபிஎஸ், என் ஆசை மச்சான், சிந்து நதி, டூயட், வல்லரசு, உள்ளிட்டா பல படங்களில் வில்லனாக தன்னுடைய தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தினார்.

Kazan Khan

குறிப்பாக உலக நாயகன்ப கமல் அவர்களின் கலைஞன், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் சேதுபதி ஐபிஎஸ், பிரசாந்தின் ஆணழகன் மற்றும் கார்த்திக் அவர்களின் மேட்டுக்குடி உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நல்ல பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வந்தார். இறுதியாக கடந்த 2008ம் ஆண்டு பொன்னம்பலம் இயக்கி வெளியிட்ட பட்டைய கிளப்பு என்ற தமிழ் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

1730690 actor kazan khan passed away news in tamil 1

மாரடைப்பால் திடீரென உயிரிழந்த பிரபல வில்லன்

இவர் மராடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். இதை புரோடக்ஷன் கன்ட்ரோலர் என். எம். பாதுஷா சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து கொண்டார். தற்பொழுது இவரின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

kazan2

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Trending News

To Top