Connect with us

மனோபாலாவை தொடர்ந்து இந்த காமெடி நடிகரும் மரணம்..! திரையுலகினர் இரங்கல்..!

0bdf6a01 a851 42b9 9cf8 087274091157 2

Cinema News

மனோபாலாவை தொடர்ந்து இந்த காமெடி நடிகரும் மரணம்..! திரையுலகினர் இரங்கல்..!

செவ்வாழை ராஜூ

திரைப்படங்களாக இருந்தாலும் சரி சின்னத்திரையாக இருந்தாலும் சரி ஒரு சில நடிகர்களுக்கு தான் தனித்துவமான கேரக்டர் மற்றும் திறமை இருக்கும். அந்த வகையில் இயக்குனர் அமீர் படைப்பில் கார்த்திக் நடித்து கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தான் பருத்திவீரன்.

23 6465d00edc6f2 1

இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் சக்க போடு போட்டது. மேலும் இந்த படத்தில் பிரியா மணி, சரவணன், பொன்வண்ணன், சுஜாதா, கஞ்சா கருப்பு உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் “பொணம் திண்ணி” கதாபாத்திரத்தில் நடித்து தன் குரலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் செவ்வாழை ராஜூ. மேலும் இவர் “கிழக்குச் சீமையிலே” படம் மூலம் பாரதிராஜாவால் அறிமுகமானவர்.

பருத்திவீரன் பட நடிகர் உயிரிழப்பு

தற்போது 70 வயதாகும் இவர் உடல் நலகுறைவால் மதுரை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

992065

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி செவ்வாழை ராஜு உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top