Connect with us

பிச்சைக்காரன் 2 படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு..? – செம கலெக்ஷன்

pichaikkaran 1

Cinema News

பிச்சைக்காரன் 2 படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு..? – செம கலெக்ஷன்

பிச்சைக்காரன் 2

இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி தற்போது முதல் முறையாக இயக்கி நடித்துள்ள திரைப்படம் பிச்சைக்காரன் 2.  காவ்யா தபார், யோகி பாபு, ஜான் விஜய், ஹரிஷ் பெரடி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நேற்று இந்த படம் உலகமெங்கும் வெளியாகி விமர்சகர்கள் மற்றும் மக்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இவர் பொதுவாக சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை கூறும் வகையில் அமையும் கதை அம்சமுள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து படங்களுக்கும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

sddd 1673956237

இவரைப் பற்றி சமீபத்தில் வந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. அதாவது விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் போது பயங்கர விபத்தில் சிக்கியிருந்தார். இதனால் அவருடைய முகத்தில் மிகவும் அடி விழுந்த நிலையில் பல மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இப்போது முழுவதுமாக அவர் குணமாகி பிச்சைக்காரன் 2 பட புரொமோஷனில் கலந்துகொண்டிருந்தார்.

முதல் நாள் வசூல்

இந்த படம் தமிழில் வெளியானது போல் தெலுங்கிலும் “பிஞ்சகாடு 2” என்ற பெயரில் வெளியானது. ஏற்கனவே முதல் பாகம் தெலுங்கில் மிகப் பெரிய வெற்றி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

1358326502 fwedbgxwyaagbnt

இப்படம் நேற்று மே 19 உலகம் முழுவதும் வெளியாகி இருந்தது. தற்போது படம் முதல் நாளில் ரூ. 8.5 கோடி வரை தெலுங்கில் வசூலித்துள்ளதாம். இது படத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வசூல் என கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top