Connect with us

40 வயதை கடந்த நடிகைக்கு அம்மாவாக நடிக்கும் சமந்தா..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

samantha 46 1

Trending News

40 வயதை கடந்த நடிகைக்கு அம்மாவாக நடிக்கும் சமந்தா..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

நடிகை சமந்தா

தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. தமிழ், தெலுங்கு என இரு திரைவுலகிலும் பிசியாக இருந்து வரும் இவர் தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்கள் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்று வருகிறார். இப்போது இவர் விஜய் தேவரகொண்டாவுடன் “குஷி” படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக துருக்கியில் நடைபெற்று வருகிறது.

Snapinsta.app 236780767 353973332882789 634431900369463637 n 1024 1

ஆரம்ப காலத்தில் அதிகளவு தெலுங்கில் முன்னணி நடிகர்களோடு நடித்து வந்த இவர் நாகார்ஜூன் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சீரும் சிறப்புமாக சென்று கொண்டிருந்த இவரது மண வாழ்க்கையில் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட விவாகரத்து பெற்றுவிட்டு படங்களில் நடிப்பதை முழுமூச்சாக கொண்டிருக்கக் கூடிய இவருக்கு மயோசிடிஸ் என்ற நோய் உள்ளது. இந்த நோய்க்காக தீவிர சிகிச்சைகளை பெற்று வரும் இவர் சமீபத்தில் ஐஸ் பாக்ஸ் தெரபி என்ற சிகிச்சையை மேற்கண்ட போது எடுத்திருந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

Snapinsta.app 258033170 430397958534300 8111615876577014217 n 1024 1

40 வயதை கடந்த நடிகைக்கு அம்மாவாக நடிக்கும் சமந்தா

இந்நிலையில் இந்தி திரையுலக நடிகை பிரியங்கா சோப்ரா நடித்துள்ள “சிட்டாடெல்” வெப் தொடரின் இந்திய பதிப்பில் நடிகை சமந்தா நடித்து வருகிறார். இதில் இந்தி நடிகர் வருண் தவான் உட்பட பலர் நடிக்கின்றனர்.

23 647d87c54a477

இதை “தி பேமிலி மேன்” வெப் தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டிகே இயக்குகின்றனர். இதில் நடிகை சமந்தா பிரியங்கா சோப்ராவுக்கு அம்மாவாக நடிக்க போவதாக தகவல் வெளிவந்தன. இதை சமந்தா உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இந்த கதை 1980,90களில் நடக்கும் பிளாஷ்பேக் காட்சியில் சமந்தா மற்றும் வருண் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

23 647d87c5f0b26

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Trending News

To Top