Connect with us

அந்த மனசு தான் கடவுள்.. புற்றுநோய் நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை வழங்கும் விஜய் ஆண்டனி.!

Home 11 1

Cinema News

அந்த மனசு தான் கடவுள்.. புற்றுநோய் நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை வழங்கும் விஜய் ஆண்டனி.!

நடிகர் விஜய் ஆண்டனி

நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என பல திறமை கொண்ட நடிகர் தான் விஜய் ஆண்டனி. இவர் இயக்கி நடித்த “பிச்சைக்காரன் 2 ”  திரைப்படம் சில நாட்கள் முன்னர் திரையரங்கில் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சில தினங்களுக்கு முன்பு விஜய் ஆண்டனி, திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள பிச்சைக்காரர்களுக்கு செருப்பு, போர்வை, பிளாஸ்டிக் விசிறி உள்ளிட்ட பொருட்கள் வழங்கி, அவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.

vijayantony1 1685544027

விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா, சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றில் பிச்சைக்காரர்களை அழைத்து படம் பார்க்க வைத்ததுடன் அவர்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து, விஜய் ஆண்டனி ஆதரவற்றவர்களுக்கும் குழந்தைகளுக்கும் சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் அசைவ உணவுகள் தன் கைகளினாலே பரிமாறி விருந்தளித்தார். இந்நிலையில் அடுத்ததாக இவர் புதிய முன்னெடுப்பை தொடங்கியுள்ளார்.

vijayantony5 1685544093

நெகிழ்ச்சியான செயல்

அவர் கூறியது என்னவென்றால் புற்று நோய்க்கு உதவி தேவைப்படுபவர்கள் தன்னை தாராளமாக அழைக்கலாம் என்று கூறியுள்ளார். புற்று நோய்க்கு சிகிச்சை பெறுபவர்கள் உதவிக்கு antibikiligsl@gmail.com என்ற மின்னஞ்சலின் முகவரியை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்து உள்ளார். இதனை அடுத்து விஜய் ஆண்டனி ஆந்திராவில் உள்ள ஜி எஸ் எல் மருத்துவமனையுடன் இணைந்து இந்த புதிய முயற்சியை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

vijayantony2 1685544047

maxresdefault 40 1

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top