நயன்தாரா ஜெயம் ரவி நடிக்கும் இறைவன் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது!!

ரிலீஸ் தேதி அறிவிப்புடன் புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

மனிதன் மற்றும் என்றென்றும் புன்னகை உள்ளிட்ட  படங்களை இயக்கிய ஐ அகமது இறைவன் இயக்கியுள்ளார். இப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் பேனரில் தயாரித்துள்ளனர். இறைவன் படத்தில் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா முக்கிய வேடங்களில் நடிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இறைவன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. புதிதாக வெளியிடப்பட்ட போஸ்டரில் நயன்தாரா ஜெயம் ரவி இருவரும் எதிர் பக்கம் இருப்பது போலும், அவர்களுக்கிடையே ஒரு கத்தி அவர்களாகி பிரிப்பது போல தெரிகிறது.